ஹங்கேரியிலுள்ள டானுபே ஆற்றில் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது எட்டு பயணிகள் மாண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 19 தென்கொரியர்கள் காணவில்லை. ஆற்றின் கடும் குளிராலும் பலமான நீரோட்டத்தாலும் காணாமல் போனவர்கள் உயிர் பிழைப்பார்களா என்பது சந்தேகமே என்று அந்நாட்டின் அவரச சேவைத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்திற்கான காரணத்தை ஆராய ஹங்கேரி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயார் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.

