கோலாலம்பூர்: மலேசியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று மாநிலங்களில் மேற் கொள்ளப்பட்ட அதிரடி சோதனை களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டதாக மலேசிய போலிஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
மூவரில் ஒருவர் மலேசியர், மற்றொருவர் இந்தோனீசியர், மூன்றாவது நபர் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்றார் அவர்.
மே 17ஆம் தேதியிலிருந்து நேற்று வரை சிலாங்கூர், கெடா, சாபா ஆகிய மூன்று மாநிலங் களில் சோதனை நடத்தப்பட்டது.
மே 17ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத் தில் மலேசியர் கைது செய்யப் பட்டார்.
எகிப்து வழியாக சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர அவர் திட்டமிட்டிருந்ததாக நம்பப் படுகிறது.
ஐஎஸ்ஐஎஸ் போதனைகளை சந்தேகப் பேர்வழி முழுமையாக நம்பியதாக போலிஸ் தலைவர் கூறினார்.
2வது சந்தேக நபரான இந்தோனீசியர் சாபாவில் கைது செய்யப்பட்டார். பிலிப்பீன்சில் தற் கொலைத் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.
இந்தோனீசியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக் குத் தேவையான ஏற்பாடுகளை அவர் செய்து வந்ததாக காவல் துறை கூறியது.
மே 30ஆம் தேதியன்று 28 வயது பங்ளாதேஷி கைது செய்யப் பட்டார்.
வெடிபொருட்களை தயாரிப்பதற் கான ரசாயனங்களை அவரிட மிருந்து காவல்துறையினர் கைப் பற்றியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் மற்றொரு இந் தோனீசிய சந்தேக நபரையும் தேடி வருகின்றனர்.
மே 26ஆம் தேதி கெனிங்காவில் மேற்கொண்ட சோதனையில் அவர் தப்பிவிட்டதாக திரு அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
மூன்று சந்தேக நபர்களின் பின்னணி, அவர்களுடைய திட் டம், அவர்களுக்கு உதவி செய்த வர்கள் யார் என்பது குறித்து மலேசிய போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

