'அதிபர் ஸி வாக்குறுதியை மீறி விட்டார்'

'அதிபர் ஸி வாக்குறுதியை மீறி விட்டார்'

1 mins read

வா‌ஷிங்டன்: தென் சீனக் கடலை ராணுவமயமாக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்த சீன அதிபர் ஸி ஜின்பிங் அதிலிருந்து மீறி விட்டார் என்று அமெரிக்கா வின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இதற்காக ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அப்பகுதியில் அனைத்துலக சட்டம் அமலாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது," என்று கூட்டுப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் கூறினார். 2016ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அப் போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தீவை ராணுவமய மாக்க மாட்டோம் என்று சீன அதிபர் உறுதியளித்தார்.

தற்போது அதே இடத்தில் 10,000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. படைத் தளவாட வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஏவுகணை எதிர்ப்புச் சாதனங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்று புருக்ளின் கல்விக் நிலையத்தில் பேசிய அமெரிக்க துணைத் தளபதி சுட்டிக்காட்டினார்.