புடாபெஸ்ட்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் டனுபா ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் ஏழு பேர் மாண்டனர். 19க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
அந்தப் படகில் இருந்த பெரும்பாலோர் தென்கொரியாவைச் சேர்ந்த சுற்றுப் பயணிகள்.
மொத்தம் 33 பேர் அதில் பயணம் செய்தனர். அந்தப் படகின் மீது மற்றொரு கப்பல் மோதியதால் விபத்து நிகழ்ந்தது என்று அந்நாட்டின் எம்டிஐ செய்தி நிறுவனம் கூறியது.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10.00 மணிக்கு விபத்து நிகழ்ந்தது.
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக சுற்றுப் பயணிகளிடையே பிரபலமாக விளங்கும் டனுபா ஆறு நிரம்பி வழிந்தது. அதோடு நீர்ச்சுழல்களும் ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்திருக் கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மூழ்கிய படகு 'ஹப்லீனி' அல்லது 'மெர்மைட்' என்று அழைக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகள் கொண்ட படகில் ஒரே சமயத்தில் 45 பேர் பயணம் செய்யலாம்.
இதற்கிடையே தென்கொரிய வெளியுறவு அமைச்சர், தங்கள் நாட்டைச் சேர்ந்த 19 பேர் மாண் டதை உறுதி செய்துள்ளார்.
ஹங்கேரிக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
தென்கொரிய தலைநகர் சோலில் செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரிய பேச்சாளர் ஒருவர், சுற்றுலா பயணத்துக்கு லீ சாங்-மூ என்ற பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரி வித்தார்.
இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையையும் காண வில்லை என்று ஹங்கேரி போலிசார் கூறினர். விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

