சுடச் சுடச் செய்திகள்

ஷங்ரிலா பாதுகாப்பு மாநாடு: சாலை  அடைப்பு, சோதனைகள்

ஷங்ரிலா ஹோட்டல் மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2 வரை சாலை அடைப்புகளும் அதிக பாதுகாப்புச் சோதனைகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

18வது ஷங்ரிலா கலந்துரையாடல் கூட்டம் அங்கு நடக்கவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஆசியப் பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த நாடுகளின் அமைச்சர்களும் பிரமுகர்களும் கூடி பாதுகாப்பு தொடர்பில் பலவற்றையும் விவாதிப்பார்கள். இந்தக் கூட்டம் ஆண்டுதோறும் நடக்கும். 

இந்த ஆண்டுக் கூட்டத்திற்கு முன்னதாக, போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு ஆலோசனைத் தகவல்களை போலிஸ் வெளியிட்டது. ஷங்ரிலா ஹோட்டலுக்கு அருகே உள்ள சாலைகளைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. 

ஷங்ரிலா ஹோட்டலுக்குள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் குறைவாக இருக்கும் என்பதால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி வருகையாளர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon