‘அமெரிக்கா பொய் பேசுகிறது’

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பூசல் தொடரும் வேளையில் ஒன்று மற்றதற்கு எதிராக வரி களை விதித்துவருகின்றன.

அமெரிக்காவின் பல பொருட் களுக்கு சீனாவும் வரியை அதி கரித்துள்ளது. ஒயின், பியானோ முதல் ஆணுறை வரையிலான இந்த  வரி உயர்வு இன்று முதல் அம லுக்கு வருகிறது. 

இந்த நிலையில் அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள் ளது.

இரு நாடுகளும் பல வாரங் களாக வர்த்தகப்பேச்சில் ஈடுபட்டு வந்தன.

இதில் ஒரு முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பேச்சு வார்த்தை எந்தப்பலனும் ஏற்படாமல் பாதியில்  நிறுத்தப்பட்டது. அப்போது முதல் இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கிப் பேசி வருகின்றன.

அமெரிக்காவுக்கு முக்கியமாக தேவைப்படும் கனிமவளங்கள் ஏற்றுமதி செய்வதை குறைக்க சீனா திட்டமிட்டு வருகிறது.

அதே சமயத்தில் சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

அண்மையில் பேசிய அதிபர் டிரம்ப், வரி உயர்வால்  சீனாவின் பொருளியல் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

நேற்று பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கெங் ‌ஷுவாங், “அமெரிக்க தரப்பில் தொடர்ந்து பொய்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன, அவர்களை வெளிப்படுத்த முயற்சி செய்யும் போதெல்லாம் பொய் பேசு கின்றனர்,” என்றார்.

இரு நாடுகளும் 360 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு தரப்பு பொருட்களுக்கு வரிகளை அதிகரித்துள்ளன.

அதிபர் டிரம்ப், சீனாவைத் தண்டிக்கும் விதமாக அந்நாட்டின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரியை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தியுள் ளார். 

இருந்தாலும் சீனாவுடன் வர்த்தக உடன்பாட்டு காண விரும்புவதாக கடந்த வியாழக் கிழமை திரு டிரம்ப் கூறியிருந்தார்.

சீனாவும் அதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு ஜூன் 1 முதல் வரி அதிகரிக்கப் படும் என்று அறிவித்திருந்தது. இது, இன்று அமலுக்கு வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon