மெக்சிகோவுக்கு 5% வரி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளைத் தடுத்து நிறுத்தத் தவறியதற்காக மெக்சிகோவி லிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என்று அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து ஐந்து விழுக்காடு வரி விதிக்கப் படும். சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சினைகள் தீரும் வரை படிப் படியாக வரி அதிகரிக்கப்படும் என்று திரு டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில் அமெரிக் காவின் வரி விதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள வட அமெரிக்காவுக்கான மெக்சிக்கோ தூதர் சியடே, அமெரிக்காவின் உத்தேச வரி விதிப்பு ஒரு பேரிடர் என்று வருணித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை யில் தேசிய அவசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்திருந் தார்.

அப்போது சட்டவிரோத குடி யேறிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அவசரநிலை அவ சியம் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மெக்சிகோ எடுக்கவில்லை என்று கடந்த காலங்களில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து மெக்சி கோவுக்குத் தற்போது டிரம்ப் புதிய கடிவாளம் போட்டுள்ளார்.

இதனால் வரி விதிப்புக்கு உடனடியாக பதில் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று திரு சியடே சொன்னார்.

இருப்பினும் அமெரிக்காவுடன் மோத விரும்பவில்லை என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவேல் லோபெஸ் ஓப்ராடோர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!