பெட்டாலிங் ஜெயா: சீனாவின் ஹுவாவெய் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள வேளையில் அந்நிறுவனத்தை ஆதரித்து பேசிய மலேசிய பிரதமர் மகாதீரை சீனத் தூதர் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து டாக்டர் மகா தீருக்கு எழுதிய ஏழு பக்கக் கடிதத்தில் சீனாவுக்கும் மலேசி யாவுக்கும் இடையே நிலவும் 45 ஆண்டுகால உறவை சீன தூத ரான பாய் டியான் நினைவு கூர்ந்துள்ளார்.
"கடந்த 45 ஆண்டுகளில் செடியாக இருந்த சீனா-மலேசிய உறவு தற்போது பூத்துக் குலுங்கும் மரமாக மாறியிருக் கிறது. இதனால் இரு நாட்டு மக்களும் பலன் அடைந் துள்ளனர்," என்று கடிதத்தில் பாய் டியான் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் பரஸ்பர மரி யாதையுடன் செயல்பட்டு வர்த்த கம், சுற்றுலா போன்ற துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் ஜப்பானில் பேசிய டாக்டர் மகாதீர், ஹுவாவெய் தொழில்நுட்பத்தை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு மலேசியா பயன்படுத்தும் என்று கூறி யிருந்தார். அமெரிக்காவின் தடைகளால் நெருக்கடியில் உள்ள ஹுவா வெய்க்கு மலேசிய பிரதமரின் பேச்சு ஆறுதலாக அமைந்துள்ளது.

