சுடச் சுடச் செய்திகள்

பறக்கும் விமானங்களில் இருந்து விழும் உதிரி பாகங்கள்

ஹாங்காங்: ஹாங்காங் விமானங்களிலிருந்து  உதிரிபாகங்கள் காணாமல் போனதை ஜப்பானிய விமானத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

திருகாணி முதல் ‘பிரேக்’ சாதனங்களில் உள்ள பாகங்கள் வரை காண வில்லை என்று கூறிய அவர்கள், இதனால் விமானத்துக்கு ஆபத்து இல்லை என்று குறிப்பிட் டனர்.

மே 26ஆம் தேதியிலிருந்து மே 28ஆம் தேதி வரை ஹாங்காங் விமானத்தைச் சோதனையிட்ட ஜப்பானிய அதிகாரிகள் சில உதிரி பாகங்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நான்கு நாட்களில் தொடர்ந்து ஏழு முறை பறந்த விமானத்தின் 17 உதிரி பாகங்கள் காணாமல் போயிருந்தது.

விமானம் பறந்தபோது நடுவானிலிருந்து உதிரி பாகங்கள் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தோக்கியோ நாரிட்டா விமான நிலையத்தின் ஓடு தளங்களில் சில உதிரி பாகங்களைக் கண்டுபிடித்த ஜப்பானிய அதிகாரிகள், இதனால் மற்ற விமானங் களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று கூறினர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon