வாஷிங்டன்: அமெரிக்காவின் வெர்ஜீனிய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வெர்ஜீனிய பீச்சில் உள்ள ஒரு நகராட்சிக் கட்டடத்திற்குள் நேற்று முன்தினம் பகல் நுழைந்த ஆடவர், அங்கிருந்தவர்களைச் சுடத் தொடங்கினார்.
இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும் அறுவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்த போலிசார் தாக்கு தல் நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் யாவர் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
காயமடைந்தவர்களில் ஒருவர் போலிஸ் அதிகாரி என்றும் அவர் அணிந்திருந்த குண்டு துளைக்கா மார்பணியால் உயிர்தப்பினார் என் றும் கூறப்பட்டது.
அமெரிக்காவின் தென்பகுதி யில் அமைந்துள்ள வெர்ஜீனிய பீச் மக்களிடையே பிரபலமான ஓர் இடம். அத்தகைய ஓர் இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது பலருக் கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் என்ன காரணத் துக்காக இதைச் செய்தார் என்ற தகவல் இன்னும் அறியப்பட வில்லை.

