ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியில் வசித்து வரும் 77 வயது மூதாட்டிக்குச் சமையலறையில் ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் பயங்கரச் சத்தம் கேட்டு மேரி விஷ்ஹசன், தம் வீட்டைச் சோதனையிட்டார். அப்போது அவருடைய சமையலறையில் 11 அடி நீளமுடைய முதலை ஒன்றை நேருக்கு நேர் சந்தித்தார். உடனே விஷ்ஹசன், படுக் கையறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு போலிசாருக்குத் தக வல் தெரிவித்தார். சமையலறை யில் அமைந்துள்ள சன்னல்கள் சற்று இறக்கமாக இருந்ததால், அந்த ஆண் முதலை சன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்ததாக போலிசார் கூறினர். வீட்டின் வெளியே உள்ள பாதாளச் சாக்கடைக்குள் நுழைய முடியாமல் போகவே முதலை வீட்டிற்குள் சென்றதாக கூறப்பட் டது. முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றதாகவும் அது ஒரு தனியார் முதலைப் பண் ணைக்குக் கொண்டு செல்லப்படு வதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சத்தம் கேட்டுச் சமையலறைக்குச் சென்ற மூதாட்டி அங்கு ஒரு முதலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். படம்: ராய்ட்டர்ஸ்

