அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது சீனா

அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது சீனா

2 mins read

பெய்ஜிங்: கிட்டத்தட்ட பல பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீதுள்ள வரிகளை அதிகரிப்பதாக நேற்று சீனா அறிவித்தது.

சீனாவின் இந்த அதிரடி நட வடிக்கையால் 60 பில்லியன் அமெரிக்க டாலர் (S$82.44 பி.) மதிப்புள்ள பொருட்கள் மீது ஐந்து முதல் 25 விழுக்காடு வரையிலான வரி விதிக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 25 விழுக்காடு வரி விதித்ததற்கு இது பதிலடி யாக இப்போது வந்துள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் சந் திப்பு நடத்தியதில் வர்த்தகப் பேச்சு கைகூடாமல் போக, இரு நாடுகளுக்குமிடையே சென்ற மாதம் வர்த்தக மோதல் தொடர்ந் தது.

இருதரப்பும் ஏட்டிக்குப்போட் டியாக வரிவிதிப்பை உயர்த்திக் கொண்டே போக, நாட்டுப் பாது காப்பு கருதி அமெரிக்கா, சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான 'ஹுவாவெய்'யைக் குறிவைத்து அதற்குத் தடை விதித்தது.

இதனால் உலகளாவிய நிலை யில் அமைந்திருந்த நிறுவனத் தின் திட்டங்கள் முடக்கப்பட்டன.

இதன் தொடர்பில் 'ஹுவாவெய்' நிறுவனத்திற்குப் பொருட்களை விநியோகம் செய் வதை நிறுத்திக்கொண்ட அமெரிக்க, வெளிநாட்டு நிறு வனங்களைத் தண்டிக்கும் நோக் கில் சீனா, நம்பகத்தன்மை அற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளது.

ஒப்பந்தங்களை மீறுதல், விநி யோகத்தை நிறுத்திக்கொள்ளு தல், சீன நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படுதல் போன்ற வற்றின் தொடர்பில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந் தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று சீன வர்த்தக அமைச்சு கூறியது.