இறுதிவரை போரிடத் தயார் எனவும் அமெரிக்கா விரும்பி னால் பேச்சுவார்த்தைக்கும் சீனா தயாராக இருப்பதாகவும் அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசலின் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை அந்த நாட்டின் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே (படம்) நேற்று வலியுறுத்தினார்.
ஷங்ரிலா மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பேசிய சீனாவின் தற்காப்பு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தைவானைப் பற்றிப் பேசிய அவர், தைவான் சீனாவுக்கு முக்கியம் என்றதுடன், அது சீனாவுடன் மீண்டும் சேர்க்கப் பட வேண்டும் என்றார். "தைவானை சீனாவிடமிருந்து யாராவது பிரிக்க முற்பட்டால், சீன ராணுவம் போரிட வேண்டிய திருக்கும்," என்றார்.
'தைவான் ரிலேஷன்ஸ் ஆக்ட்' மூலமாக சீனாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவர் குற்றஞ் சாட்டினார். தைவானுக்கு தற் காப்பு ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு அந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
தென்சீனக் கடல் விவகாரம் குறித்து பேசிய திரு வெய், அந்த வட்டாரத்தில் நிலைத்தன்மை அதி கரித்து வருவதாகச் சொன்னார்.
தங்களது எல்லைக்குள் இருக்கும் அந்த வட்டாரத்தில் தீவுகள் கட்டுவது தங்களது உரிமை என்று கூறிய அவர், அங்கு ராணுவ தளங்கள் ஏற்படுத்துவதையும் தற்காத்துப் பேசினார்.
அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சீனா ஆக்ககரமான அங்கம் வகித்திருப்பதாகவும் அவர் சொன்னார். அதிமுக்கியமான அமெரிக்க, சீன வர்த்தகப் பூசல் தொடர்பாகப் பேசிய அவர், இரு தரப்பு ஒத்துழைப்பு பலனளிக்கும், மோதல் போக்கு இருதரப்பையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டு, இருதரப்பும் ஒத்துழைப்புடன் செயல்பட வலியுறுத்தினார்.
அமைதியான மேம்பாட்டையே விரும்புவதாகவும் மேலாதிக்கம் செலுத்த விரும்பவில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, சீனா இடையே போட்டி வலுத்து வருவதால் இவ் வாண்டு ஷங்ரிலா மாநாட்டுக்கு சீனா உயர்நிலை அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக கவனிப் பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சவால்களை எதிர்கொள்ள வட் டாரக் கட்டமைப்பை உருவாக்கும் இந்தோ-பசிபிக் உத்தி பற்றி அமெரிக்கா விவரித்துள்ளதால், சீனா தனது நிலையைத் தெளிவு படுத்துவது அவசியம் எனக் கருதுவதாகவும் இல்லாதபட்சத் தில் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியால் பல நாடுகள் ஈர்க்கப்படக்கூடும் என சீனா கவலையுறுவதாகவும் எஸ்.ராஜரத் தினம் அனைத்துலகப் பள்ளியின் துணைப் பேராசிரியர் லி மிங்ஜியாங் கூறியுள்ளார்.

