ஷங்ரிலா பாதுகாப்பு மாநாட்டில் நேற்று பேசிய அமெரிக்க தற்காலிக தற்காப்பு அமைச்சர் ஷனாஹன் சீனா தொடர்பாக மூன்று முக்கிய விவரங்களை முன்வைத்தார்.
அமெரிக்காவை சீனா 'வெளியாள்' என்று குறிப் பிட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆசியா- பசிபிக்கில் அமெரிக்கா பசிபிக் வட்டாரத் தைச் சேர்ந்தது என்று சுட்டிக்காட்டினார்.
இந்த வட்டாரத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய வற்றில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவைவிட அமெரிக்கா இந்த வட்டாரத்தில் கூடுதல் முதலீடுகள் செய்திருப்பதைச் சுட்டினார். சீனாவின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும் அதனைக் குறிப்பிட்டு, ஆக்கிரமிக்கும் நோக்குடனான ராணுவ வசதிகள், சூறையாடும் பொருளியல் போன்றவற்றை இந்த வட்டாரத்தில் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் இந்தோ-பசிபிக் உத்தியை முன்வைத்திருந்தாலும், தற்போது அதனைச் செயல்படுத்த நிதி கிடைக்கும் என ஷனாஹன் கூறியுள்ளார்.

