தோக்கியோ: தோக்கியோவில் தானாக இயங்கும் ஓட்டுநர் இல்லா ரயில் திசை மாறி ஓடி கடை மீது மோதியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் ஐந்து பெட்டிகளைக் கொண்ட ரயில் விபத்துக்குள் ளானது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர் என்று தெற்கு தோக்கியோவின் கனகாவா வட்டார போலிஸ் பேச்சாளர் சொன்னார்.
சிலர் மோசமான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சுமார் 20 மீட்டர் தவறான திசையில் ஓடிய பிறகு ஷின்-சுகிடா நிலையத்தில் ஒரு கடை மீது மோதியது என்று ரயில் சேவை நிறுவனத்தின் தலைவர் அகிஹிகோ மிகாமி கூறினார்.
ஜப்பானில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநர் இல்லா ரயில் சேவை அறிமுக மானது.
இத்தகைய ரயில் விபத்தில் சிக்குவது இதுவே முதல் முறை.
ரயில் சேவை எப்போது மீண்டும் தொடங்கும் என்பது பற்றி ரயில்வே நிர்வாகம் தெரி விக்கவில்லை.

