சுடச் சுடச் செய்திகள்

பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த அதிபர் தவறிவிட்டார்: இலங்கை முன்னாள் போலிஸ் தலைவர்

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அதிபர் மைத்ரி பால சிறிசேன தடுத்து நிறுத்தத் தவறி விட்டார் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலிஸ் தலைவர் புஜித் ஜயசுந்தரா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதிபர் சிறிசேனவுக்குக் கீழ் செயல்படும் உளவுத் துறை அமைப்புகளுக்கும் அரசாங்க பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையே தொடர்பில் பெரிய இடை வெளி நிலவியதாகக் கூறினார். 

கடந்த ஆண்டு போராளிகள் தொடர்பாக நடந்துகொண்டிருந்த போலிஸ் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று உளவு அமைப்பு களும் அரசாங்க உளவுத்துறையும் தமக்கு உத்தரவிட்டதாக இருபது பக்க புகாரில் அவர் தெரிவித்தார்.

அதிபர் சிறிசேனவுடன் நேரடித் தொடர்புகொண்ட உளவுத் துறை, ஈஸ்டர் நாள் தாக்குதலுக்குக் காரணமான தேசிய தோஹீத் ஜமா உட்பட முஸ்லிம் போராளிகள் அமைப்புகளின் அனைத்து விசார ணைகளையும் நிறுத்த உத்தரவிடப் பட்டது.

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அண்டை இந்தியா வழங்கிய ரகசியத் தகவல்களை உளவுத் துறை தலைவர் நிலந்தா ஜய வர்த்தனே தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று போலிஸ் தலைவர் கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதல் களுக்குப் பொறுப்பு ஏற்க மறுத்த தால் ஜயசுந்தராவை பதவியி லிருந்து அதிபர் சிறிசேன நீக்கியதாகக் கூறப்படுகிறது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon