காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 17 பேர் காயம் அடைந்தனர் என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவித் தனர்.
காயம் அடைந்தவர்களில் ஆப்கன் செய்தியாளரும் ஒருவர். முதல் குண்டுவெடிப்பை படம் பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டாவது குண்டுவெடித்ததில் அவர் காயம் அடைந்தார்.
காபூல் பல்கலைக்கழக மாண வர்களை ஏற்றிச்சென்ற பேருந் துக்கு அடியில் முதல் குண்டு வெடித்தது என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் ரஹிமி சொன்னார்.
அடுத்த சில நொடிகளில் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த 2வது, 3வது குண்டுகள் வெடித் தன.
"ஒருவர் இறந்துவிட்டார். ஆப் கன் ராணுவப் படையைச் சேர்ந்த ஐவர் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர்," என்று அவர் கூறினார்.
இதுவரை குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
ஆனால் அண்மையில் தலி பானும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி யிருந்தன.
இதனால் இரு அமைப்புகளில் ஏதாவது ஒன்று வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சமூக ஊடகத்தில் பதிவேற்றப் பட்ட காணொளியில் செய்தி யாளருக்கு காலில் காயம் ஏற் பட்டுள்ளதைக் காண முடிந்தது.
கடந்த ஆண்டு இதே போன்று குண்டுவெடிப்பு சம்பவத்தைப் கேள்விப்பட்டு செய்தி சேகரிக்க சென்ற ஒன்பது செய்தியாளர்கள் இரண்டாவது குண்டுவெடித்த போது கொல்லப்பட்டனர்.

