பிரிட்டன் 39 பி. பவுண்டை தரக்கூடாது: அதிபர் டிரம்ப்

பிரிட்டன் 39 பி. பவுண்டை தரக்கூடாது: அதிபர் டிரம்ப்

2 mins read

வா‌ஷிங்டன்: ஐரோப்பிய ஒன்றியத் துக்கு 39 பில்லியன் பவுண்டை தராமலே பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுரை வழங்கி யுள்ளார்.

பிரக்சிட் பேச்சுவார்த்தையில் வேண்டியது கிடைக்கவில்லை என்றால் உடன்பாடு எதுவும் இல்லாமலே வெளியேறலாம் என்றார் அவர்.

பிரிட்டனுக்கான அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு சண்டே டைம்ஸ் நாளேட் டுக்கு அவர் பேட்டியளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நைஜல் ஃபராஜை அனுப்ப வேண்டும்.

இவ்வாண்டிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"பிரக்சிட் வெளியேற்றத்தை உடனடியாக செய்தாக வேண்டும், என்னைப் பொறுத்தவரை நியாய மான உடன்பாடு ஏற்படவில்லை யென்றால் வெளியேறிவிடுவேன். நீங்களும் வெளியேற வேண்டும்," என்று டிரம்ப் சொன்னார்.

இந்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி காலக்கெடுவுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து வெளியேற வேண்டும் என்று பிரதமர் மேவுக்கு போட்டி யாக உள்ள பிரதமர் வேட்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை அதிபர் டிரம்ப்பும் வரவேற்றுள்ளார். பிரதமர் மேவுக்கு அடுத்த நிலையில் உள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனும் அவர்களில் ஒருவர். வெள்ளிக்கிழமை சண்டே டைம்சுக்கு அளித்த பேட்டியில் போரிஸ் ஜான்சனையும் முன்னாள் பிரக்சிட் அமைச்சர் டோமினிக் ராப், உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோரையும் டிரம்ப் பாராட்டி பேசியிருந்தார்.

"பழமைவாதிகள் பிரக்சிட் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் கட்சித்தலைவரான நைஜல் ஃபராஜை பயன்படுத்தாதது பிரிட் டனின் தவறு.

"எனக்கு நைஜலை மிகவும் பிடிக்கும். அவரால் அதிகம் செய்ய முடியும்," என்றார் அவர்.

பிரக்சிட்டிலிருந்து வெளியேறு வது பற்றி தொடர்ந்து பேசிய அதிபர் டோனல்ட் டிரம்ப், "நானாக இருந்தால் ஐம்பது பில்லியன் டாலரைத் தர மாட்டேன். இது மிகப்பெரிய தொகை," என்று குறிப்பிட்டார்.