பாதி உலகைச் சுற்றி வரும் 20 மணி நேர விமானப் பயணங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சொகுசாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடம், படுக்கைகள் போன்ற வசதிகள் இருக்காது என்றும் பயணிகளுக்குத் தண்ணீரும் உடலை நெட்டிமுறிப்பதற்கு ஓர் இடமும் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் 'குவாண்டாஸ் ஏர்வேஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் ஜாய்ஸ்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து லண்டன் வரை இடைநிறுத்தம் இல்லாமல் 20 மணி நேர விமானப் பயணத்தை வழங்க குவாண்டாஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த விமானப் பயணம் வழங்கப்படுமா என்பது இன்னும் நிச்சயமில்லை.
விமான ஓட்டுநர்கள் இந்த நீண்ட நேரப் பயணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்றும் நீண்ட பயணத்தைத் தாங்கக்கூடிய விமானத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார் திரு ஜாய்ஸ்.

