சாட்டுசாக் சந்தையில் தீ: 200 கடைகள் அழிந்தன

சாட்டுசாக் சந்தையில் தீ: 200 கடைகள் அழிந்தன

1 mins read
feda1e32-28cb-4fee-bcc9-bdd8e9ae9028
பேங்காக்கில் உள்ள பிரபல சாட்டுசாக் சந்தையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ. படம்: டுவிட்டர் -

தாய்லாந்து தலைநகர் பேங்காக் கில் உள்ள புகழ்பெற்ற சாட்டுசாக் சந்தையில் நேற்று முன்தினம் இரவு தீ மூண்டது.

இந்தத் தீச்சம்பவத்தில் இருவர் காயமுற்றனர். தீயில் கருகி சந்தையில் இருந்த 200 கடைகள் அழிந்தன.

விடுமுறை காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கடைகளுக்குள் சென்று தீயை அணைக்க வேண்டியிருந்ததால் தீயணைப்புப் படையினர் பூட்டு களை உடைத்து உள்ளே சென் றனர். பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவியது.