அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சீனா எச்சரிக்கை

அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சீனா எச்சரிக்கை

1 mins read

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் கல்விப் பயில்வது சவாலானது என்று சீனா எச்சரித்துள்ளது.

வர்த்தகப் போர், தென் சீனக் கடல் பகுதி விவகாரம், தைவா னுக்கு ஆதரவளிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் அமெ ரிக்கா, சீனா இடையிலான உறவு சீர்குலைந்துள்ளது.

இந்த நிலையில், கல்விப் பயில்வதற்காக அமெரிக்கா செல்ல முயன்ற சில மாணவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டிருப்ப தாக சீன கல்வித் துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மாணவர்களின் விசா காலம் கட்டுப்படுத்தப்படுவதாகவும் விசாக்களை நிராகரிப்பது அதிக ரித்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதுபோன்ற கெடுபிடிகளால் சீனாவில் இருந்து அமெரிக்கா செல்வதிலும் படிப்பை முழுமையாக நிறைவு செய்வதிலும் மாணவர் களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே மாணவர்களும் கல்வியாளர்களும் அமெரிக்காவில் படிப்பதற்கு முன்கூட்டியே அதற் கான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பது மிகவும் அவசியம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

"வெளிநாடுகளில் பயில் வதற்கு முன்பு அதற்கான அபா யங்கள் குறித்து மாணவர்களும் கல்வியாளர்களும் ஆராயுமாறு கல்வி அமைச்சு நினைவுறுத்து கிறது," என்று சீனக் கல்வி அமைச்சு கூறியது.