ஜகார்த்தாவில் புகைமூட்டத்தால் திணரும் மக்கள்; அரசுக்கு எதிராக வழக்கு

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலை நகர் ஜகார்த்தாவில் நீண்டகாலமாக நிலவிவரும் மோசமான புகை மூட்டப் பிரச்சினை மக்களைத் திணறடிக்கிறது.

இதற்கு ஒரு முடிவு காணும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதி ராக வழக்குத் தொடுக்க 57 பேர் அணி சேர்ந்துள்ளனர்.

மத்திய ஜகார்த்தா மாவட்ட நீதிமன்றத்தில் இம்மாதம் 18ஆம் தேதி அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். குறிப் பாக, அதிபர், சுற்றுப்புற, வனப் பகுதி அமைச்சர் மற்றும் ஜகார்த்தா, மேற்கு ஜாவா, பென்தான் மாகாண ஆளுநர் களுக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்படும் என்று எல்பிஎச் ஜகார்த்தா எனும் சட்ட நிறுவ னத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அயூ இஸா தியாரா நேற்று முன் தினம் தெரிவித்தார்.

வழக்கு தொடுக்கும் 57 நபரில் 20 பேர் சுற்றுப்புற ஆர்வலர்கள் என்றும் எஞ்சியுள்ள 37 பேரில் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த குடிமக்களாவர் என்றும் அயூ கூறினார்.

அந்த 37 குடிமக்களில் மாண வர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழி யர்கள், தொழிலதிபர்கள், வழக்கறி ஞர்கள், ஆய்வாளர்கள், அரசு ஊழியர்கள், மோட்டார்சைக்கிள் டாக்சி ஓட்டுநர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் அடங்குவர்.

வழக்கைத் தயாரிக்க எல்பிஎச் ஜகார்த்தா நிறுவனம் ஏப்ரலில் ஒரு மாத காலத்திற்கு அமைத்து இருந்த புகார் நிலையத்தில் அவர்கள் அனைவரும் பதிவு செய்துகொண்டனர்.

காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்கும் வண்ணம் இந்த நட வடிக்கை அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஜகார்த்தாவில் காற்று மாசு பாட்டைக் கட்டுப்படுத்த அர சாங்கம் கடுமையான கொள்கை களை வகுக்க வேண்டும் என்பதே அக்குழுவினரின் இலக்கு.

காற்று தூய்மைக்கேடு தொடர்பில் 1999ஆம் ஆண்டில் நிறைவேற்றிய ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு அந்த விவகாரம் குறித்த கொள்கைகளை அரசாங்கம் வகுப்பதாக கிரீன்பீஸ் இந்தோனீசியா அமைப்பின் ஆர்வலர் போண்டான் ஆன்ட்ரி யானு கூறினார். “இந்தச் சட்டம் 20 ஆண்டு களுக்கு முன்பு நிறை வேற்றப்பட்டது. காற்று தூய்மைக் கேடு மோசமடைந்திருப்பதால் புதிய நிபந்தனைகளுடன் சட்டம் புதுப் பிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!