டிரம்ப் பிரிட்டிஷ் பயணம்

டிரம்ப் பிரிட்டிஷ் பயணம்

2 mins read
4c676192-4fc5-4dc3-b397-f8dc1d7a4a0c
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரது மனைவி மெலெனியாவும் பிரிட்டனின் பக்கிங்ஹம் அரண்மனையில் எலிசபெத் அரசியாரின் (நடுவில்) விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தனது மனைவி யுடன் நேற்று தொடங்கி நாளை வரை பிரிட்டனுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற் கொண்டுள்ளார். திரு டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் எலிசெபத் அரசியார் பக்கிங்ஹம் அரண்மனையில் நேற்று மாலை விருந்தளித்து உபசரித்தார்.

'பிரெக்சிட்' விவகாரத்தில் உள்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே, நாளை மறுதினம் பதவி விலப்போவதாக அறி வித்திருந்தார். அவரையும் பல முக்கிய பிரமுகர்களையும் திரு டிரம்ப் சந்தித்துப் பேசினார்.

பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு சுற்றுலா மேற்கொண்ட அவர், இளவரசர் சார்லஸ், கான்வால் சீமாட்டி கமிலா ஆகி யோரை சந்தித்தார்.

பிரிட்டனுக்குப் பயணம் மேற் கொள்வதற்கு முன்னால் பிரிட் டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு அளிப்பதாக திரு டிரம்ப் தி சன் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்து இருந்தார்.

"பிரிட்டனுடன் சிறந்த நட்பைக் கொண்டாட நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் டுவிட்டரில் திரு டிரம்ப் பதிவிட்டார்.

நட்பு நாடுகளான அமெரிக்கா வுக்கும் பிரிட்டனுக்கும் இடை யிலான உறவை மேம்படுத்த திரு டிரம்ப்பின் பயணம் வகைசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெக்சிட்டிற்கு பிந்திய வர்த்தக உடன்பாட்டிற்கான தளத்தை அமைக்கவும் திரு டிரம்ப்பின் வருகை உதவும் எனக் கூறப்பட்ட வேளையில், கூடிய விரைவில் அந்த உடன்பாடு இறுதிப்படுத்தப் படும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் திரு டிரம்ப்பின் பிரிட்டிஷ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளி யாகின.

திரு டிரம்ப்பின் பிரிட்டிஷ் வருகையின்போது அவரைக் கோபமான குழந்தைபோல சித்தி ரிக்கும் ராட்சத பலூனைப் பறக்க விட்டு போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டனர்.

பிரிட்டனில் திரு டிரம்ப் எங்கு சென்றாலும் அந்த பலூன் அந்தந்தப் பகுதியில் பறக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர்.