சிங்கப்பூர் ஹச்ஐவி தரவுத்தள கசிவு வழக்கு அமெரிக்காவில் தொடங்கியது

சிங்கப்பூரின் ஹச்ஐவி தரத்தள கசிவுக்குக் காரணமான அமெரிக்கர் மிக்கி ஃபரேரா புராச்செஸ், கசிவு பற்றி பொதுமக்களுக்குத் தெரிய வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 2016ஆம் ஆண்டில், சிங்கப்பூரிலிருந்த தனது கணினி இணைப்புத்தளத்திலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும்படி தனது தாயிடம் கூறியிருந்தார். அந்தக் கோப்புகளில் ஹச்ஐவி பதிவேடும் உள்ளடங்கியிருக்கக்கூடும்.

புராச்செஸுக்கு எதிரான வழக்கு அமெரிக்காவின் கென்டக்கி மாநில நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் முதல் நாளான ஜூன் 3ஆம் தேதி சாட்சியம் அளித்த அவரது தாயார் திரேசா கிங், கென்டக்கியில் இருந்துகொண்டு பதிவிறக்கம் செய்த கோப்புகளைத் தான் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். தனது மகன் பார்க்கக்கூடாது என்று சொன்னதால் கோப்புகளைப் பார்க்கவில்லை என்றார் அவர்.

“அது அவனுக்கு வாழ்வா சாவா என்றளவுக்கு முக்கியம் என்று சொன்னான். அதனை நான் அவனுக்காகப் பதிவிறக்கம் செய்தாகவேண்டும் என்றான்,” என்றார் திருமதி கிங். “இதற்காக அவன் என்மீது மிகுந்த கோபப்பட்டான்,” என்றும் கூறினார் கென்டக்கியில் வாழும் ஓய்வுபெற்ற கல்வியாளரான திருமதி கிங்.

புராச்செஸ் சிங்கப்பூரில் திருடிய தரவுத்தளத்தை எவ்வாறு கென்டக்கிக்குக் கொண்டு சென்றார் என்பதைத் திருமதி கிங்கின் சாட்சியம் புலப்படுத்தியது. இச்சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தரவுத்தளத்தை வெளியிடப் போவதாக சிங்கப்பூர் அதிகாரிகளை மின்னஞ்சல்வழி அவர் மிரட்டினார்.

சிங்கப்பூரில் திருடப்பட்ட அடையாளப் பத்திரங்களின் தொடர்பில் 34 வயது புராச்செஸ் அமெரிக்காவில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். சிங்கப்பூர் அரசாங்கத்தை மிரட்டும் நோக்கத்துடன் இவ்வாண்டு ஜனவரி 22, பிப்ரவரி 18 தேதிகளில் இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பியதாகவும், திருட்டுப் பத்திரங்களைத் தெரிந்தே வைத்திருந்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நடந்த ஐந்தரை மணிநேர விசாரணையின்போது, ஏழு பேர் சாட்சி அளித்தனர்.

ஹச்ஐவி தரவுத்தள கசிவு பற்றி சிங்கப்பூரிலிருந்து தகவல் கிடைத்தபிறகு, ஜனவரி மாதம் புராச்செஸை விசாரணைக்கு வரவழைக்க பலமுறை முயன்றதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி திருவாட்டி ஹாலிடே கூறினார்.

“தரவுத்தளத்தைத் திருப்பித் தருவதைவிட தனது தலையில் சுட்டுக்கொள்வதே மேல் என்று அவர் சொன்னார்,” என புராச்செஸுடன் தொலைபேசியில் பேசியதை அவர் விவரித்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon