மெக்சிகோ வரி மிரட்டலால் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஆபத்து

மெக்சிகோ வரி மிரட்டலால் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஆபத்து

1 mins read
91f075b4-78f0-4e1a-887f-8085ce4ae201
-

மெக்கிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குச் சுங்க வரி விதிக்க தயாராவதன்மூலம் மெக்சிகோவுடனும் கனடாவுடனும் செய்யப்படவிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் ஆபத்தை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (ஜூன் 3) எச்சரித்தனர். குடியரசு கட்சியினரும் இவர்களில் உள்ளடங்கினர்.

மெக்சிகோவின் இறக்குமதிகளுக்கு அடுத்த வாரம் முதல் 5 விழுக்காடு சுங்க வரி விதிக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு டிரம்பை அவர்கள் கேட்டுக்கொண்டனர். இல்லாவிடில், வர்த்தக ஒப்பந்தம் தோல்வியடையும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

குடியரசு கட்சியினர் அதிபரின் முக்கிய திட்டங்களுக்கு மிரட்டலான முறையில் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பது அரிது. புதிய வரிக்கான வளர்ந்துவரும் எதிர்ப்பு, அதிபருக்கும் அவரது கட்சிக்கும் இடையிலான உத்தேச பிரச்சனையைக் கோடிகாட்டுகிறது.

ஆனால், வரி விதிப்பு திட்டத்தை மாற்றப்போவதில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். புதிய வரி மிரட்டலுக்கும் வர்த்தக ஒப்பந்தத்திற்கும் தொடர்பில்லை என்று அவர்கள் கூறினர்.

"நன்னம்பிக்கையின் அறிகுறியாக, மெக்சிகோ அதன் நாட்டிலிருந்து மக்களும் போதைப்பொருளும் நமது தென் எல்லை வழியாக நுழைவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்," என்று லண்டனுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். "அவர் நினைத்தால் அவர்களால் அதைச் செய்யமுடியும்!" என்றார் அவர்.