'மகாதீரை சார்ந்திருக்காதீர்கள்'

'மகாதீரை சார்ந்திருக்காதீர்கள்'

1 mins read

பிரதமர் மகாதீரே சுமையைச் சுமக்க வேண்டுமென எதிர்பார்க்காமல் அனைத்துலகின் கவனத்தைப் பெறுவதில் பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமரின் ஊடக ஆலோசகர் திரு காதிர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் அண்மையில் நடந்த மாநாட்டின் உரையாடல்கள் பற்றி தமது வலைப்பூவில் குறிப் பிட்ட காதிர் யாசின், மலேசிய அமைச்சர்களுடனான தொடர்பு போதிய அளவு இல்லை என்ற பார்வையாளர்களின் கருத்தை முன்வைத்தார். அனைத்தையும் மகாதீரின் பொறுப்பிலேயே விட்டுவிடுவது நியாயமற்றது என்ற அவர், உள்ளூர், வெளிநாட்டு வர்த்தகர்கள், முதலீட்டார்கள், நிதி நிர்வாகிகளை ஈடுபடுத்துவதில் சில முக்கிய அமைச்சர்கள் சுணக்கம் காட்டுவதைக் கடிந்து கொண்டுள்ளார். பொருளியல், நிதி, வர்த்தகத் துறைகளுக்குப் பொறுப்பாக வுள்ள அமைச்சர்கள் அரசாங் கத்தை முன்னடத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றார் மூத்த ஊடகவியலாளரான திரு காதிர்.