அமெரிக்க நட்பு நாடுகளுக்கு ஆளில்லா வானூர்திகள்

வா‌ஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் நிகழக்கூடிய சீனநாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக் கும் நோக்கில் அவ்வட்டாரத்தில் உள்ள நான்கு நட்பு நாடுகளுக்கு ஆளில்லா வானூர்திகளை விற் பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

தென்சீனக்கடல் வட்டாரத்தில் சீனா எடுத்து வரும் நடவடிக்கை களை முடக்குவதன் தொடர்பில் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க இந்த வானூர்திகள் உதவும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா கிட்டத்தட்ட 47 மில்லியன் அமெரிக்க டாலர் (S$64 மி.) மதிப்புடைய 34 ‘ஸ்கேன்ஈகல்’ வகை ஆளில்லா வானூர்திகளை மலேசிய, இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ், வியட்நாம் அரசாங்கங்களுக்கு விற்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த ஒப்பந்தப்படி மலேசியா வுக்கு 12 ஆளில்லா வானூர்திகள் கிட்டத்தட்ட 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படும்.

உலகின் ஆக அதிக எண் ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ள நாடான இந்தோனீசியாவுக்கு எட்டு, பிலிப்பீன்சுக்கு எட்டு, வியட்நாமுக்கு ஆறு என்ற கணக் கில் வானூர்திகள் விற்கப்பட உள்ளன.

உதிரி மற்றும் பழுதுபார்ப்பு பாகங்கள், கூடுதல் உபகரணங்கள், கருவிகள், பயிற்சி மற்றும் தொழில் நுட்பச் சேவைகள் ஆகியவையும் இந்த விற்பனை ஒப்பந்தத்தில் அடங்கும்.

தென்சீனக் கடற்பகுதியின் பெரும்பான்மை தனக்கே சொந்த மானது என்று சீனா கூறி வரு கிறது.

அத்துடன் சீனத் தீவுகள் அருகே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கடற்படை நட வடிக்கைகளை நடத்துவது குறித் தும் சீனா அடிக்கடி அமெரிக்கா வைக் கடுமையாகக் கண்டித்து வருகிறது.

இவ்வாறு கண்டனம் தெரிவிக் கும் நாடுகளின் பட்டியலில் புருணை, இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள் ளன.

சிங்கப்பூரில் நடந்த ஷங்ரிலா கலந்துரையாடல் கூட்டத்தில் சனிக்கிழமை அன்று பேசிய அமெரிக்க தற்காலிக தற்காப்பு அமைச்சர் பேட்ரிக் ஷனஹன், இது குறித்துப் பேசியிருந்தார்.

ஆசியாவின் நிலைத்தன்மை சில நாடுகளால் சீர்குலைவதாகக் கூறிய திரு ஷனஹன், மறைமுக மாக சீனாவைச் சாடியதுடன் சீனாவின் நடத்தையை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருக்காது என்றும் தம் உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

சென்ற ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உத் தரவில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் கொள்கை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது.

நட்பு நாடுகளுக்கு இவ்வாறு செய்யும் விற்பனையால் அமெரிக்க தற்காப்புத் துறை வலுப்பெறுவ துடன் உள்நாட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் படும் என்பது நோக்கம்.

இனி நான்கு நட்பு நாடுகளுக் கும் விற்பனை செய்யப்படவுள்ள ‘ஸ்கேன்ஈகல்’ வகை ஆளில்லா வானூர்திகள் வெறும் கண்காணிப் புத் திறன் மட்டுமே கொண்டவை.

ஆயுதம் ஏந்தித் தாக்குதல் நடத்தக்கூடியதாக இவை இருக் காது.

ஆனால் அமெரிக்க கடற்படை யாலும் அதன் வீரர்களாலும் பயன் படுத்தப்பட்டு வரும் ஆயுதம் ஏந் திய ஒருவகை ஆளில்லா வானூர் திகளைத் தயாரிக்கும் அதே நிறு வனம்தான் இந்த ‘ஸ்கேன்ஈகல்’ வானூர்திகளையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!