தோல்வியடைந்த தற்கொலை தாக்குதல்

தோல்வியடைந்த தற்கொலை தாக்குதல்

2 mins read

ஜகார்த்தா: நோன்புப் பெருநாளுக்கு இரு நாள் முன்னர் இந்தோனீசியாவின் மத்திய ஜாவா பகுதியிலுள்ள போலிஸ் சாவடி வெளியே தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு செயல்பட்ட 22 வயது ரோஃபிக் அஷருடீன், தன் இடுப்பைச் சுற்றி வெடி குண்டுகளைக் கட்டிக்கொண் டார்.

பின்னர் திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் போக்கு வரத்தைக் கண்காணிக்கும் ஒரு போலிஸ் சாவடி வெளியே வெடி குண்டுகளை வெடிக்கச் செய் தார். ஆனால் அவர் வைத்த வெடி, அவருக்கே பாதகமாக அமைந்தது.

ரோஃபிக்குக்கு வயிற்றிலும் கையிலும் கடுமையான காயங் கள் ஏற்பட்டன. உடனே அவர் அருகில் இருந்த மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார்.

வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த சமயத்தில் போலிஸ் சாவடியில் ஏழு அதிகாரிகள் இருந்தனர்.

ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என் றும் போலிஸ் பேச்சாளர் நேற்று செய்தியாளர் கூட்டத்திடம் தெரி வித்தார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் தாக்குதல்காரரின் உடல் நிலை தேறி வருவதாகவும் அவர் முழுமையாகக் குணமடைந்தபின் அவர் எப்படி ஐஎஸ்ஐஎஸ் கொள் கைகளின் தாக்கத்திற்கு ஆளா னார் என்ற விசாரணை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தாக்குதல்காரர் சமூக ஊட கத்தின்வழி கொள்கைகளில் ஒன்றிப் போனாரா அல்லது வேறு நபர்களுடன் உள்ள தொடர்பால் இவ்வாறு தாக்குதல் நடத்தினாரா என்பது இவ்விசாரணை மூலம் தெரிய வரும்.

அத்துடன் தாக்குதல்காரரின் வீட்டைச் சோதனையிட்டதில் வெடிச் சாதனங்கள், 'பொட் டேசியம் குளோரேட்' கொண்ட பிளாஸ்டிக் பாத்திரங்கள் ஆகி யவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஓர் எண்ணெய் வகை யுடன் சேர்ந்து கலக்கப்பட்டால் வெடிபொருள் உருவாகலாம்.