'சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு வேண்டாம்'

'சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு வேண்டாம்'

1 mins read

சூரிக்: சீனாவுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகள் வைத்திருப் பது குறித்து அமெரிக்க மாநிலச் அமைச்சர் மைக் பொம்பியோ சுவிட்சர்லாந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்தப் பக்கமும் சார்ந்திராத ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, சீன நிறுவனங்களின் உதவியுடன் தன் உள்கட்டமைப்பை உருவாக் கும்போது தனியுரிமை மீறல்களால் பாதிப்படையும் வாய்ப்புகள் ஏற் படும் என்றார் அவர்.

'ஹுவாவெய்' நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் தையும் சாதனங்களையும் பயன் படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது.

'ஹுவாவெய்' நிறுவனம் ரகசியத் தொடர்புகளையும் தரவு களையும் கண்காணிக்க இயலும் என்பதே இதற்கான காரணம் என்று கூறப்பட்டது.

சீனாவுக்காக வேவு பார்ப்பதாக தன்மீது கூறப்பட்டுள்ள இக்குற்றச் சாட்டை 'ஹுவாவெய்' மறுத்தும் வருகிறது.

பல காலமாகவே தனியுரிமைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சுவிட்சர்லாந்து, சீனத் தொழில்நுட்பத்துடன் இயங்கினால், தகவல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போய்ச் சேரும் என்றும் தனியுரிமை மீறப் படும் என்றும் திரு பொம்பியோ அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தூதரகச் சக்தியாக இயங்கி வரும் சுவிட்சர்லாந்து, ஆழமான ஜனநாயக மரபுகளைக் கொண்டது.

அதன் பங்கைப் பெரிதும் பாராட்டிய திரு பொம்பியோ, முக்கியப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் சுட்டினார்.