கோலாலம்பூர்: நோன்புப் பெரு நாளைக் கொண்டாடுவதற்காக மில்லியன் கணக்கான இந்தோனீ சியர்களும் மலேசியர்களும் தங்களின் ஊருக்குத் திரும்பியவண்ணம் உள்ளனர்.
கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வாகனங்கள் நேற்று ஒரே நாளில் ஜகார்த்தாவை விட்டு கிளம்பி இருக்கும் என்று கூறப்பட்டது.
மலேசியாவில் ஐந்து மில்லியனுக்கும் மேலான மக்கள் கோலாலம்பூர், பினாங்கு, ஜோகூர் பாரு போன்ற இடங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

