டார்வினில் துப்பாக்கிச்சூடு; நால்வர் பலி, இருவர் காயம்

டார்வினில் துப்பாக்கிச்சூடு; நால்வர் பலி, இருவர் காயம்

1 mins read

டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந் தனர்.

கிட்டத்தட்ட 45 வயது மதிக் கத்தக்க ஓர் ஐரோப்பிய நாட்டு ஆடவர் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் கூறியிருந்தனர்.

ஆடவர் மாலை 5.50 மணி அளவில் ஒரு விடுதிக்குள் நடந்துசென்று தன் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விடுதியின் அறைகளுக்குள் ஒவ்வொன்றாகச் சென்று துப்பாக் கிச்சூடு நடத்திய ஆடவர், யாரையோ தேடியதுபோல் இருந்த தாகவும் கூறப்பட்டது.

அத்துடன் ஐந்தாவது நபர் ஒருவர் பலியாகியுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதிகாரிகள் இத்தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை.

சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்ட தாகக் கூறப்பட்டது.

இன்று சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார்.