பெர்லிஸ்: கிட்டத்தட்ட 100 ஆண்டு பழமை வாய்ந்த தங் களின் மூதாதையர் வீட்டை, மூன்று கண்பார்வையற்ற மூதாட் டிகள் இழக்க நேர்ந்தது.
கடனாக 50 ரிங்கிட் பணம் கேட்டு வந்த உறவினரிடம் பணம் கொடுக்க மறுத்தார் அந்த மூதாட்டிகளில் ஒருவர்.
ஆத்திரத்தில் அந்த இளைஞர் உடனே வீட்டுக்குத் தீ வைத்தார். கண்பார்வை தெரியாத அந்த மூன்று மூதாட்டிகளும் சகோதரி கள். அவர்களின் வயது 67, 73, 78 ஆகும். இந்தத் தீச்சம்பவத்தில் மூதாட்டிகள் கிட்டத்தட்ட 10,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், நகைகள், நில ஒதுக்கீட்டுப் பணம் ஆகியவற்றை இழந்ததாக கூறப்பட்டது. அத்துடன் நோன் புப் பெருநாளுக்கென அவர்கள் அலமாரியில் பத்திரமாக வைத்து இருந்த புத்தாடைகளும் தீக்கு இரையாகின.
பணம் கேட்டு வந்தவனை 10 வயது முதல் வளர்த்து வரும் மூதாட்டிகளில் ஒருவர், அவனுக்குப் பசை உமிழும் பழக் கம் இருப்பதை அறிந்து பணம் தர மறுத்துவிட்டார்.
தற்போது மூதாட்டிகள் எரிந் துபோன வீடு எதிரே உள்ள ஒரு கைவினைத் தொழிற்சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

