கொழும்பு: இலங்கையில் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் பதவியை விட்டு விலகியுள்ளனர்.
ஈஸ்டர் தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பயங்கரவாத அமைப் பினருடன் தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட தால் ஒன்பது அமைச்சர்களும் தங்கள் பதவியைத் துறந்தனர்.
மூன்று உயர்பதவி அரசியல் வாதிகளைப் பதவியை விட்டு நீக்குமாறு புத்த மதத் துறவி அதுரலியே ரதனா என்பவர் கோரி இருந்தார். சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி நான்கு நாட்களுக்குமுன் தொடங்கினார்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்போராட்டத்தில் கலந்துகொண் டனர். அவர்களுடன் கிறிஸ்தவர் களும் இணைந்தனர். இதைத் தொடர்ந்து ஒன்பது அமைச்சர் களும் பதவி விலகுவதற்கான கடிதங்களை அதிபர் சிறிசேன விடம் ஒப்படைத்தனர்.

