தாய்லாந்து: எம்பி பதவியிலிருந்து அபிசித் விலகல்

தாய்லாந்து: எம்பி பதவியிலிருந்து அபிசித் விலகல்

1 mins read
c4592249-e102-4eb7-8e81-36b0fa446c0e
அபிசித். படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்காக்: தாய்லாந்து ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் அபிசித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளியிருக்கிறார்.

நேற்று காலை தனது பதவி விலகல் முடிவை அறிவித்த அவர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மீற விரும்பவில்லை என்றார்.

"தேர்தலுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்தபோது ஜெனரல் பிரயுத் சன்-ஓ-சாவை ஆதரிக்க மாட்டோம் என்று கூறியிருந் தோம். ஆனால் தற்போது அதனை மீறும் வகையில் ஜெனரல் பிரயுத்தை ஆதரிக்க கட்சி முன் வந்துள்ளது. இதனால் பதவியிலிருந்து விலகுகிறேன்," என்று அபிசித் கூறினார்.

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நேற்று நாடாளுமன்றம் கூடிய வேளையில் அபிசித் பதவி விலகியிருக்கிறார்.

தற்போதைய பிரதமராக ஜெனரல் பிரயுத் மீண்டும் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நேற்று மாலை வெளி யான தகவல்கள் தெரிவித்தன.