நண்பரைச் சந்தித்த அதிபர் ஸி

மாஸ்கோ: சீன அதிபர் ஸி ஜின்பிங் தனது நெருங்கிய நண் பரைச் சந்தித்து உறவை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.

நேற்று பிற்பகல் மாஸ்கோ வந்து சேர்ந்த அவர் முழு ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அமெரிக்காவுடன் வர்த்தகப் பூசல் தொடரும் வேளையில் சீன அதிபர் ஸியின் மாஸ்கோ பயணம் இடம்பெற்றுள்ளது.

கிரம்ளின் மாளிகையில் அதி பர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்த திரு ஸி, தற்போது நிலவும் வர்த்தக சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்தார் என நம்பப்படு கிறது. பின்னர் மாலையில் போல் ஷோய் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் கிரிமியா வட்டாரத்தை மாஸ்கோ கைப்பற்றியதால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பின. 

இதையடுத்து மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு  மோச மடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புட்டினும் சீன அதிபர் ஸியும் பேச்சு நடத்தியுள்ளனர்.

மாஸ்கோவுக்குப் புறப்படு வதற்கு முன்பு ரஷ்ய ஊடகங் களுக்குப் பேட்டியளித்த திரு ஸி, சீனாவும் ரஷ்யாவும் பரஸ்பர நம் பிக்கையுடன் வலுவான அரசியல் உறவைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார். 

சீன அதிபர் ஸி மூன்று நாட் கள் ரஷ்யாவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ரஷ்ய அதிபர் ஏற்பாடு செய்துள்ள பொருளியல் கருத்தரங்கிலும் திரு ஸி பங்கேற்க இருக்கிறார். அதிபர் புட்டின்-சீன அதிபர் ஸி சந்திப்பு பற்றி முழு விவரம் நேற்று மாலை வரை வெளியாகவில்லை.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon