அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகின் ஆகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ள அமெரிக் காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் வர்த்தகப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற் றது. ஆயினும், உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் அது தோல்வியில் முடிந்தது. சீனாவுடன் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் நேற்று கூறிய போதும் கடந்த மாதம் 10ஆம் தேதியில் இருந்து இரு நாட்டுத் தலைவர்களோ அல்லது அதிகாரி களோ நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அந்த நாளில்தான் 200 பி. அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கான வரியை 25 விழுக்காடாக உயர்த்தி அறி வித்திருந்தார் டிரம்ப். பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட் களுக்கான வரியை உயர்த்தியது.
"சீனாவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். என்னால் 300 பி. அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட் களுக்கு வரி விதிக்க முடியும். பொருத்தமான நேரத்தில் அதைச் செய்வேன்," என்று செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார். அதே நேரத்தில், என்னென்ன பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனிடையே, வர்த்தகப் பதற் றத்தை அதிகரிக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபட்டால் சீனாவும் இறுதி வரை போராடும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா அதிகபட்ச நெருக்கடி அளித்து வருவதே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் குறிப் பிட்ட சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் காவ் ஃபெங், அமெ ரிக்கா எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே பேச்சுவார்த்தையின் போக்கு தீர்மானிக்கப்படும் என்றும் சொன்னார். அத்துடன், வர்த்தகப் பதற் றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்ள முயன்றால் சீனாவும் தகுந்த எதிர் நட வடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், வரிகளை உயர்த்துவோம் என அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி எச்சரிக்கை விடுப்பது வர்த்தக, சந்தை நம்பகத் தன்மையைப் பாதிக்கும் என்றும் அது உலகளாவிய வளர்ச்சியை மந்தப்படுத்திவிடும் என்றும் அனைத்துலகப் பண நிதியம் எச்சரித்து இருக்கிறது.
இதனிடையே, தைவானுக்கு $2.73 பில்லியன் மதிப்பிற்கு ஆயு தங்களை விற்க அமெரிக்கா திட்ட மிட்டிருப்பதைக் கடுமையாகக் கருதுவதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் முடிவை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று இரு தரப்பு உறவுகளும் தைவான் நீரி ணையில் அமைதியும் நிலைத்தன் மையும் பாதிக்கப்படாத வகையில் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சீனா வலியுறுத் தியுள்ளது.

