நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் முதல் நாள், ஜோகூரிலுள்ள எட்டு வயது சிறுமியின் பெற்றோர்களுக்குக் கண்ணீரில் முடிந்தது.
அவர்களது கார் திங்கி-மெர்சிங் சாலையில் ஃபெல்டா தெங்காரோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்த சிறுமியின் தந்தை திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, கார் சறுக்கிச் சாலையோரத்தில் கவிழ்ந்ததாக ஜோகூர் மாநில போலிசார் தெரிவித்தார்.
எட்டு வயது சிறுமி மரிஸா அஸ்ஸாராவுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்தில் மாண்டதாகவும் கூறப்படுகிறது. அவளது 12 வயது சகோதரன் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.

