'புட்டின் சிறந்த நண்பர்'

'புட்டின் சிறந்த நண்பர்'

1 mins read
d3a2f44e-a7c5-429c-bfb1-a4b9917e35e7
மாஸ்கோவுக்கு வருகையளித்துள்ள அதிபர் ஸி நேற்று ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்விடேவைச் சந்தித்தார். நேற்று முன்தினம் அதிபர்புட்டினை திரு ஸி சந்தித்தார். படம்: ராய்ட்டர்ஸ்உலகப்போர் வீரர்களுடன் அதிபர் டிரம்ப்இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடும் அதிபர் டிரம்ப். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தாக்கப்பட்ட டி-டேயின் 75வது ஆண்டு விழா நேற்றுபிரான்சில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கலந்துகொண்டனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: மூன்று நாள் பயணம்மேற்கொண்டு சீனா சென்றுள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புட்டினைச் சிறந்த நண்பர்என புகழ்ந்துள்ளார்.அமெரிக்காவுடன் வர்த்தகப்பூசல் தொடரும் வேளையில்அதிபர் ஸி, திரு புட்டினைச்சந்தித்துப் பேசியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேவர்த்தகம், இரு தரப்பு உறவைவலுப்படுத்தும் எண்ணத்தில்அதிபர் ஸி மாஸ்கோ சென்றுள்ளார்.உக்ரேன் பிரச்சினையில் மேற்கத்திய நாடுகளுடனான உறவுகசப்படைந்ததால் ரஷ்யாவுக்கும்சீனாவின் நல்லுறவு தேவைப்படுகிறது.

சீன அதிபர் ஸி, இருதரப்பு நல்லுறவின் அடையாளமாகமாஸ்கோ விலங்கியல் தோட்டத்துக்கு இரண்டு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளார்.அந்த பாண்டா கரடிகளின்குறும்புச்செயல்களை இருதலைவர்களும் நேரில் கண்டுமகிழ்ந்தனர். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பலதரப்பட்டவர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

நேற்று முன்தினம்மாஸ்கோவுக்கு வந்த அதிபர் ஸிசெய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது ரஷ்ய அதிபருடன்ஆழ்ந்த நட்புறவு நிலவுவதாகத்தெரிவித்தார்."கடந்த ஆறு ஆண்டுகளில்அவரை முப்பது முறை சந்தித்துள்ளேன். அதிகம் பயணம் மேற்கொண்ட நாடும் ரஷ்யாதான்.ரஷ்ய அதிபர் புட்டின் என்னுடையசிறந்த நண்பர்," என்று அதிபர்ஸி சொன்னார்.இதனை ஆமோதித்த ரஷ்யஅதிபர் புட்டினும் ரஷ்ய-சீன உறவுமுன் எப்போதும் இல்லாதஅளவுக்கு வலுப்பெற்றுள்ளதுஎன்றார்.