ரஷ்யாவில் ஹுவாவெய்க்கு வரவேற்பு

ரஷ்யாவில் ஹுவாவெய்க்கு வரவேற்பு

1 mins read
cf33b3d6-e8ac-4d31-9f3d-7df10caaf72c
-

ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்கா புறக்கணித்தாலும் ரஷ்யா அதனை வரவேற்றுள்ளது. சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்யாவுக்குச் சென்ற முதல் நாளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் 5ஜி இணையக் கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவ்விரு தலைவர்களும் மற்றும் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹுவாவெய்க்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைகள் குறித்து உலக நாடுகளின் நிலைப்பாடு பிளவுபட்டிருக்கிறது. சில நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளன; வேறு சில நாடுகள் ஹவாவெய்க்கே தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவையோ சீனாவையோ பகைத்துக்கொள்ள விரும்பாமல் மதில் மேல் பூனையைப் போல இருக்கின்றன ஒரு சில நாடுகள்.

சீன அரசாங்கத்திற்காக ஹுவாவெய் வேவு பார்க்கும் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதனை ஹுவாவெய் தொடர்ந்து மறுக்கிறது. ஹுவாவெய்யைத் தடை செய்ய பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்குதல் அளித்து வருகிறது. ஹுவாவெய்க்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து பிரிட்டன் தெளிவான நிலைப்பாட்டை எட்டவில்லை. இருப்பினும் ஹுவாவெய்யின் இணையப்பாதுகாப்பு தரமாக இல்லை என்றும் முன்னேற்றம் அதிகளவு தேவைப்படுவதாகவும் அந்நாட்டின் மூத்த இணையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.