சீனாவின் வளர்ச்சி முன்னுரைப்பு குறைப்பு

சீனாவின் வளர்ச்சி முன்னுரைப்பு குறைப்பு

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: இவ்வாண்டிற்கான சீனாவின் பொருளியல் வளர்ச்சி குறித்த தனது முன்னுரைப்பை அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) சற்று குறைத்துள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு தான் வளர்ச்சி முன்னுரைப்பை 6.3 விழுக்காடு நிதியம் உயர்த் தியது. ஆனால் இப்போது அதை 6.2 விழுக்காடாக குறைத்துள்ளது.

உலகின் இரு ஆகப் பெரிய பொருளியல் சக்திகளான சீனா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பதற்றம் மோசம் அடைவதே, சீனாவின் பொரு ளியல் வளர்ச்சி முன்னுரைப்பைத் தான் திருத்தி அமைத்ததற்கான காரணம் என்று நிதியம் விளக்க மளித்தது.

"குறுகியகால பொருளியல் கண்ணோட்டம் தொடர்ந்து நிலைத்தன்மையற்று காணப்படு கிறது. வர்த்தக உடன்பாட்டில் சமரசம் எட்டப்படாவிடில் வர்த்தகப் போர் இன்னும் மோசமடையும் அபாயம் நிலவுகிறது," என்று நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் டேவிட் லிப்டன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சீன இறக்கு மதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்திருந்தாலும் இந்த ஆண்டிற்கும் அடுத்த ஆண் டிற்கும் வளர்ச்சியைச் சரிக்கட்ட சீன அரசாங்கம் இதுவரை அறி வித்துள்ள கொள்கைகள் வளர்ச்சியை நிலைப்படுத்தக்கூடியதாக அமையும் என்றார் திரு லிப்டன்.