ஏலத்தில் 48,000 டாலருக்கு விலைபோன டுரியான்

ஏலத்தில் 48,000 டாலருக்கு விலைபோன டுரியான்

1 mins read
d46a6b3e-f359-401e-87fb-1e63c0c8940b
பணக்கார டுரியான் பிரியர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்த விலையுயர்ந்த பழம். படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்காக்: தாய்லாந்தில் ஏலத் திற்கு விடப்பட்ட ஒரு டுரியான் பழம் 1.5 மில்லியன் பாட் (48,000 அமெரிக்க டாலர்) விலைக்கு விற்பனையாகி உள்ளது.

உலகின் ஆக விலையுயர்ந்த டுரியான் பழ ரகமான 'கான்யாவ்' ரகத்தைச் சேர்ந்த அப்பழம் தாய் லாந்தின் மத்திய வட்டாரத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது.

பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடந்த இந்த ஏலத்தில் அங்கம் வகித்த ஒன்பது டுரியான்களையும் அழகாக அலங்கரிக்கப்பட்ட பேழைகளில் ஏந்தி சிவப்புக் கம்பளத்தில் மாடல் அழகிகள் அன்னநடை நடந்து வந்தனர்.

ஒவ்வொரு டுரியானும் 300,000 பாட்டுக்கு மேல் விலை போனது.

அதன் ஆகச் சிறந்த அளவு, வடிவம், சரியாகக் கனிந்த நிலை ஆகியவற்றின் அடிப் படையில் 1.5 மில்லியன் பாட் வசூல் செய்த டுரியான் அதிகாரி களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தாய்லாந்தைச் சேர்ந்த தொழி லதிபர் ஒருவர் அப்பழத்தை ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் வசூல் செய்யப்பட்ட 4.5 மில்லியன் பாட் பணத்தில் பெரும்பங்கு விவ சாயிகளுக்குப் பகிர்ந்து வழங் கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது.

எஞ்சிய தொகை உள்ளூர் அற நிறுவனங்களுக்கு வழங்கப் படும்.

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 'கான் யாவ்' ரக விலையுயர்ந்த டுரி யான்கள் அழிந்து போகும் நிலையை எட்டின.

ஆனால் ஒரு சில பண்ணை களில் மட்டும் அந்த ரக டுரியான் பழ மரங்கள் மீண்டும் வளர்க்கப் பட்டன.