பண்டிகை நாட்களில் அதிகரித்த விபத்துகள்: மலேசியாவில் 159 பேர் மரணம்

ஜோகூர் பாரு: மலேசியாவில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘ஒப் ராயா செலாமாட் 15’ எனப்படும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதல் ஒன்பது நாட்களில் ஜோகூர் மாநிலத்தில் மட்டும் 19 மரணங்கள் பதி வாகின.

இம்முறை நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்தின்போது ஜோகூரில் 2,041 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டை (ஒப் செலாமாட் 13) காட்டிலும் இவ்வாண்டு விபத்து களின் எண்ணிக்கை சுமார் 8.16 விழுக்காடு அதிகரித்துள்ளது என ஜோகூர் மாநில காவல் படை தலைவர் முகம்மது கலீல் காதர் முகம்மது தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 1,887 விபத்துகள் பதிவான வேளையில், இம்முறை கூடுதலாக 154 சம்பவங்கள் பதிவாகின,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டார்.

இம்முறை தென் ஜோகூர் பாரு பகுதியில்தான் அதிகளவில் விபத்துகள் நிகழ்ந்தன. அங்கு 454 சம்பவங்கள் பதிவாகி உள்ள வேளையில் வட ஜோகூர் பாரு பகுதியில் 232 சம்பவங்களும் ஸ்ரீ ஆலம் பகுதியில் 200 சம்பவங் களும் பதிவாகி உள்ளன.

கடந்த ஆண்டு நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் ஜோகூரில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 18 பேர் மரணம் அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மரணம் ஏற்பட்டது என்று திரு கலீல் கூறினார்.

இதற்கிடையே, விரைவுச் சாலைகளில் மோட்டார்சைக்கி ளோட்டிகளிடையே மரணத்தை விளைவிக்கும் விபத்து விகிதம் அதிகமாக இருப்பதால் விரைவுச் சாலைகளைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு ‘பிளஸ்’ எனப்படும் மலேசிய விரைவுச்சாலைத்துறை மோட்டார்சைக்கிளோட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து நேற்று முன்தினம் வரை 13 மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்த தாக பிளஸ் தலைமைச் செயலாக்க அதிகாரி ஸக்கரியா அகமது ஸபிடி கூறினார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறும்.

இதற்கிடையே, மலேசியாவில் நோன்புப் பெருநாளின் இரண் டாவது நாளான நேற்று முன்தினம் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 19 பேர் உயிரிழந்ததாக அரச மலே சியப் போலிஸ் படையின் செய்தித் தொடர்புப் பிரிவுத் தலைவர் அஸ்மாவதி அகமது தெரிவித்தார்.

“ஜோகூரில் ஐந்து மரணங்கள், சிலாங்கூரில் நான்கு மரணங்கள், பாஹாங், திரங்கானு, சாபா ஆகிய மாநிலங்களில் தலா இரு மரணங்கள், கெடா, பேராக், நெகரி செம்பிலான், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரணம் நிகழ்ந்தன,” என்றார் அவர்.

“கடந்த மாதம் 29ஆம் தேதி ஒப் ராயா செலாமாட் 15 நடவ டிக்கைகள் தொடங்கியது முதல் இதுவரை 159 பேர் மரணம் அடைந்துவிட்டனர்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த ஒன்பது நாட்களில் மொத்தம் 20,903 வாகனங்கள் விபத்துகளில் சிக்கியதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!