ஹுவாவெய்க்கு பின்னடைவு

சான் ஃபிரான்சிஸ்கோ: சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் தயாரிக்கும் கைபேசி களில் ஃபேஸ்புக் செயலி ஏற்கெனவே நிறுவப்பட்டிருப்பதை ஃபேஸ்புக் நிறுவனம் இனி அனுமதிக்காது.

அமெரிக்க தொழில்நுட்பப் பாகங்கள், மென்பொருள் ஆகிய வற்றை வாங்க ஹுவாவெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்திருப்பது அந்நிறுவனத் திற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஃபேஸ்புக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆனால், ஏற்கெனவே ஹுவாவெய் கைபேசிகளை வைத்திருப்பவர்கள் ஃபேஸ்புக் செயலியைத் தொடர்ந்து பயன் படுத்தவும் ‘அப்டேட்’களைப் பெறவும் முடியும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியது.

புதிய ஹுவாவெய் கைபேசி களில் ஃபேஸ்புக் செயலியுடன் வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் செயலி களும் முன்கூட்டியே நிறுவப்பட்டு இருக்காது.

திறன்பேசி உற்பத்தி நிறுவ னங்கள் பொதுவாக திறன்பேசி களை விற்பதற்கு முன்னதாக அவற்றில் ஃபேஸ்புக் போன்ற பிரபல செயலிகளை முன்கூட்டியே நிறுவ சம்பந்தப்பட்ட நிறுவனங் களுடன் வர்த்தக உடன்பாடுகளில் ஈடுபடுவதுண்டு.

ஹுவாவெய் கைபேசிகளுக்கு ‘ஆன்ட்ராய்ட்’ மென்பொருளை வழங்கப்போவதில்லை என்று கூகல் நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது. என்றாலும், தற்போதைய புதிய ஹுவாவெய் கைபேசிகளுக்கான ‘கூகல் பிளேஸ்டோர்’ செயலியும் கூகலின் அனைத்து செயலிகளும் தொடர்ந்து கிடைக்கும்.

ரஷ்யாவில் ஹுவாவெய்க்கு அமோக வரவேற்பு

ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்கா புறக்கணித்தாலும் ரஷ்யா அதனை அமோகமாக வரவேற்றுள்ளது. சீன அதிபர் ஸி ஜின்பிங் ரஷ்யாவுக்குச் சென்ற முதல் நாளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் 5ஜி இணையக் கட்டமைப்பு தொடர் பான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். அவ்விரு தலைவர்களும் மேலும் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்திருப்பதாகவும் கூறப்படு கிறது.

ஹுவாவெய்க்கும் அமெரிக்கா வுக்கும் இடையிலான சர்ச்சைகள் குறித்து உலக நாடுகளின் நிலைப் பாடு பிளவுபட்டிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!