தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழிவறை என நினைத்து அவசரகாலக் கதவைத் திறந்த விமானப் பயணி

1 mins read

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் கழி வறை என நினைத்து அவசர காலக் கதவைத் திறந்ததால் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குக் கிளம்ப இருந்த விமானம் ஏழு மணி நேர தாமதத்துக்கு உள்ளானது.

அவசரகாலக் கதவை அந்தப் பெண் திறந்ததால் நெருக்கடி நிலையின்போது விமானத் திலிருந்து வெளியேற பயன்படுத் தப்படும் சறுக்கு மிதவைகள் இயக்கப்பட்டன.

அதையடுத்து, விமானத்தில் இருந்த நாற்பது பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அவர் களது பயணப் பெட்டிகளும் வெளியேற்றப்பட்டன. பாதிக்கப் பட்ட பயணிகள் ஹோட்டலில் தங்க பாகிஸ்தான் இன்டர் நேஷனல் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்தது. அவர்கள் இன்னொரு விமானம் மூலம் இஸ்லாமாபாத் செல்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.