சீனாவின் உத்தேச நாடு கடத்தும் சட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து நேற்று ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான மக்கள்மாபெரும் பேரணியில் கலந்துகொண்டனர். ஹாங்காங் அரசியல்எதிரிகளை இலக்காக வைத்து சீனா இந்தச் சட்டத்தைகொண்டுவருவதாக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள்கூறுகின்றனர்.
இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம், சந்தேக நபர்களைஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்த வழிவகைசெய்யும். ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள்,மாணவர்கள், ஜனநாயக ஆதரவு பிரமுகர்கள், சமயக் குழுக்களின்உறுப்பினர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றனர். படம்: ஏஎஃப்பி

