சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் முடிதிருத்தும் கடையில் தகராறு;இந்திய நாட்டவர் அடித்துக்கொலை

ஈப்போ: மலேசியாவில் இந்தியநாட்டவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார் என்று நியூஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.சனிக்கிழமை நடந்த சம்பவத்தில் பெகான் ரஸாகியில் உள்ளமுடிதிருத்தும் கடையில் பணியாற்றிவரும் 56 வயது இந்திய நாட்டவரை மூவர் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ராஜா பெர்மாய்சுரி பய்னுன்மருத்துவமனையில் சிகிச்சைபலனளிக்காமல் அதிகாலை 2.15மணியளவில் அவர் மரணமடைந்தார். 

சந்தேக நபர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில்அவருக்குத் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணையில்பாதிக்கப்பட்டவரை நண்பர்கள்சிலர் மருத்துவமனையில் சேர்த்தது தெரிய வந்தது என்று ஈப்போ காவல்துறை துணைத் தலைவர் மசுகி மட் கூறினார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

முடிதிருத்தும் கடையில் உள்ளசோபா, நாற்காலி, ஓய்வு அறைஆகிய இடங்களிலிருந்து 15 ரத்தமாதிரிகளை தடயவியல்நிபுணர்கள் சேகரித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி 20முதல் 40 வயது வரையில் உள்ளமூன்று சந்தேக நபர்களைக் கைதுசெய்தனர்.

கடையில் உள்ள கண்காணிப்புக் கேமரா செயல்படாததால்சம்பவம் பற்றிய காட்சிகள் பதிவாகவில்லை. 

ஆனால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் டீ சட்டையும் காலணிகளும்கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே இந்தியநாட்டவருக்கு மரணம் விளைவித்த காரணத்தை உறுதி செய்ய பிரேதப்பரிசோதனைக்கு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon