பெட்டாலிங் ஜெயா: மலேசிய ஊழல் தடுப்புஆணையத்தின்(எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீஃபாகோயா பதவி விலகும் கோரிக்கைக்கு ஆதரவு பெருகிவருகிறது. இதற்கு இணையம் வழியாகவும் ஆதரவுதிரட்டப்படுகிறது.
இந்த நிலையில் கெஅடிலான் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹமது தனதுஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சத்தியவங்சாநாடாளுமன்ற உறுப்பினரான அவர், எம்ஏசிசியின்ஆணையர் பொறுப்பை நாடாளுமன்ற தேர்வுக் குழுவேகையாள வேண்டும் என்றார்.

