அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஈராக்கிலிருந்து தமது படைகளை நியூசிலாந்து மீட்டுக்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை எதிர்க்க ஈராக் தற்காப்புப் படையினருக்குப் பயிற்சியளிக்கும் நோக்கில் நியூசிலாந்து படையினர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவின் முன்னிலையில் ஐஎஸ் அமைப்பினரை எதிர்கொள்ள 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிக்கு தோள்கொடுக்க ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து பயிற்சி வழங்குவதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த 95 படை வீரர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர்.
அடுத்த 12 மாதங்களுக்குள் நியூசிலாந்து அந்தக் கடப்பாட்டை நிறைவேர்த்தி தமது ஈடுபாட்டை குறைத்துகொள்ளும் என்று கூறினார் பிரதமர் ஆர்டன்.

