மலேசியாவில் தாயாரை மறந்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுவிட்ட மகன்

மலேசியாவில் தாயாரை மறந்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுவிட்ட மகன்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் நோன்பு பெருநாளை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, அவசரமாக ஆடவர் ஒருவர் தனது 73 வயதுத் தாயாரை மறந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரிலிருந்து கோலதிரங்கானுவிற்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த ஆடவர் புக்கிட் பேஸி ஓய்வு நிறுத்தத்தில் காரை நிறுத்தினார். அவரது மனைவி கழிவறைக்குச் சென்றபோது மகனும் தாயாரும் காரில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஆடவர் உறங்கிவிட்டார். அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது தாயாரும் கழிவறைக்குச் சென்றுவிட்டார். அதனை கவனிக்காத ஆடவர், மனைவி திரும்பியதும் காரை ஓட்டிச் சென்றுவிட்டார். கழிவறையிலிருந்து திரும்பிய தாயார் அதிர்ச்சியடைந்தார். அவ்வழியில் வந்த சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த மூதாட்டி மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.