ஆயர் குரோ: நாட்டில் உள்ள பொதுச் சேவை ஊழியர்கள் ஆளும் கட்சிக்குக் கட்டுப்பட்டு இருக்காமல் சுதந்திரமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், நாட்டின் நிர்வாகம் நன்கு நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த ஆளும் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் நேற்று கேட்டுக்கொண்டார்.
"கடந்த பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு மாநில, மத்திய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு சிலருக்கு இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கடின மாக இருக்கலாம். ஒரு சிலர் இன்னும் கடந்த கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கலாம்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
"ஜனநாயக முறையை நாம் ஏற்றுக் கொள்வதன் மூலமாக அதில் சில நேரங் களில் தேர்தல்களின்போது அரசாங்கம் மாற்றம் காணுகையில் அரசாங்க ஊழி யர்கள் தங்களை ஆளும் அரசாங்கத் திடமிருந்து விடுவித்துக்கொள்ள தெரிந்து இருக்க வேண்டும்," என்றார் அவர்.

